வீட்டில் நிம்மதி ஏற்பட இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!

Photo of author

By Divya

வீட்டில் நிம்மதி ஏற்பட இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!

வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் நிம்மதியாக மனக்கசப்புகள் இன்றி அன்போடு இருக்க கீழே கொடுப்பட்டுள்ள பரிகாரத்தை செய்யவும்.

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை நாள் அன்று செய்ய வேண்டும். இதனால் வீட்டில் நிச்சயம் நல்ல மாற்றத்தை உணரலாம்.

தர்ப்பை வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜிகளை கிரகிக்கும் தன்மை பெற்றுள்ளது. அதனால் தான் இதனை ஹோமங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று வீட்டின் நடுப்பகுதியில் தூபக்கால் அல்லது மண்சட்டி வைத்துக் கொண்டு அதில் நாலைந்து தர்ப்பைப் புல்லை போட்டுக் கொள்ளுங்கள்.

தர்ப்பை புல் எரிவதற்கு கற்பூரத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். திருஷ்டி நீங்க கல் உப்பும், கடுகும் முதமையானதாக கருதப்படுகிறது. இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து எரியும் நெருப்பில் போட்டுக் கொள்ளுங்கள்.

தர்ப்பை புல் இவைகள் எரியும் பொழுது நம் கண்ணுக்கு தெரியாமல் நம்மை சுற்றி இருந்த நெகட்டிவ் எனர்ஜிகள் கிரகிக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிடும். அதன் பின் வீட்டில் நிச்சயம் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்து இருக்கும்.

தேவையில்லாத சண்டை, சச்சரவுகள் நீங்கி வீட்டில் நிம்மதி உண்டாகும்.

அதேபோல் ஆண்டுதோறும் கணபதி ஹோமம் செய்வது நல்லது. கஜலட்சமி உருவத்தை தலைவாசலுக்கு மேல் வைப்பது நல்லது.

வீட்டு படியில் இருபுறமும் யானை சிலை இருப்பது நல்லது. கண்ணாடி பாத்திரத்தில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து தண்ணீர் ஊற்றி வைக்கலாம். இவ்வாறு செய்தால் வீட்டில் நிச்சயம் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்து இருக்கும்.