உங்களுக்கு பிடித்த பீடைகள் போக்க இதை செய்து பாருங்க !! நிச்சியம் பலன் கிடைக்கும்!..

0
172

உங்களுக்கு பிடித்த பீடைகள் போக்க இதை செய்து பாருங்க !! நிச்சியம் பலன் கிடைக்கும்!..

இது என்ன வீணா போன கையோ.. வந்த பணம் ஒரு பைசா கூட தங்கவில்லை. கைக்கு வந்த பணம் உப்பாக கரைந்து விடுகிறது.பணத்தை கையில் தொடவே பயமாக இருக்கிறது. அதிர்ஷ்டம் கெட்ட கையாக உள்ளது. இந்த கையால் எந்த செயலை செய்தாலும் அது வெற்றி அடையவில்லை. இப்படி தரித்திரம் பிடித்த கையை அதிர்ஷ்டம் நிறைந்த வளமான செழிப்பான கையாக மாற்றுவது எப்படி. நாம் எதை தொட்டாலும் அது பொன்னாக மாற வேண்டும். அந்த அளவிற்கு உங்களுடைய கைகள் சுத்தமாக வேண்டும் என்றால் இந்த தண்ணீரில் கையை கழுவலாம்.

 

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருளாக இளநீர், கற்பூரவள்ளி இலைகள் 2 தேவை அரை டம்ளர் அளவு இளநீரில், கற்பூரவள்ளி இலைகளை நன்றாக கழுவி நசுக்கி போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின்பு இந்த தண்ணீரை கொண்டு உங்களுடைய கையை கழுவிக்கொள்ள வேண்டும். அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் தண்ணீரில் கையை வைத்து இருங்கள். பிறகு நல்ல தண்ணீரில் கையை கழுவ வேண்டாம்.

வாரத்தில் ஒரு நாள் எந்த கிழமையில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து கொள்ளலாம். தவறு கிடையாது. மாலை ஆறு மணிக்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்து முடித்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து இந்த தண்ணீரில் கையை கழுவி வர மேலும் அதிர்ஷ்டம் உங்களைத் தேடிக் கொண்டு வரும் முடியாதவர்கள் மூன்று வாரத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் கைக்கு வந்த பணம் செலவாகாமல் சேமிப்பில் தங்கும். நீங்கள் எந்த காரியத்தை தொட்டாலும் அது துலங்கும்.

உடல் அசதியாக இருக்கிறது, கை கால் மிகவும் வலிக்கிறது, யாருடைய கண் பட்டதோ என்று தெரியவில்லை என்று சில சமயம் சொல்கிரோம். அப்படி அடித்துப் போட்ட வலி உடம்பில் உள்ளது. அவ்வப்போது தூக்கம் வருகிறது ஏதோ சண்டை சச்சரவு பிரச்சனை உள்ளது மன நிம்மதி இல்லை எனும் போது வீடு துடைக்கின்ற தண்ணீரில் சிறிதளவு இந்த தண்ணீரை ஊற்றி கலந்து வீடு துடைத்தால் வீட்டை பிடித்த கண் திருஷ்டி அனைத்தும் விலகும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.

 

 

 

Previous articleகுட் நியூஸ்! சொத்துவரி கட்ட இனி நீங்க அலைய வேண்டாம்! உடனே இதை மிஸ் பண்ணாம பாருங்க!
Next articleதேங்காய் எண்ணெய்யில் இத்தனை பயங்களா? அனைவரும் அறிவோம்!