குட் நியூஸ்! சொத்துவரி கட்ட இனி நீங்க அலைய வேண்டாம்! உடனே இதை மிஸ் பண்ணாம பாருங்க!

0
94

குட் நியூஸ்! சொத்துவரி கட்ட இனி நீங்க அலைய வேண்டாம்! உடனே இதை மிஸ் பண்ணாம பாருங்க!

சொத்து வரி என்பது சொத்துரிமைக்கு விதிக்கப்படும் நேரடி வரி. சொத்து வரி செலுத்துதல் என்பது இந்தியாவில் வளர்ச்சி மற்றும் குடிமை அமைப்புகளுக்கு வருமான ஆதாரமாகும்.சொத்துவரி பொது சீராய்வின்படி நிர்ணயிக்கப்பட்ட சொத்துவரியினை உரிமையாளர்கள் செலுத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சியின் முந்தைய சென்னை மாநகராட்சி அல்லது இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளுக்கென பரிந்துரைப்பட்டுள்ள உயர்வு காரணிகளின் அடிப்படையில் சொத்துவரி பொது சீராய்வு,இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளுக்கென பரிந்துரைக்கப்பட்டுள்ள உயர்வு காரணிகளின் அடிப்படையில் சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளில், ஏற்கனவே சொத்துவரி உயர்வாக உள்ள பகுதிகள் என கண்டறியப்பட்டவைகளுக்கு, அவற்றிற்கு அருகாமையில் உள்ள முந்தைய மாநகராட்சி பகுதிகளைவிட, சொத்துவரி அடிப்படை தெரு கட்டணம் அதிகமாக இல்லாதவாறு நிர்ணயம் செய்ய, அனுமதி பெறப்பட்டு சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது, பொது சீராய்வின்படி சொத்துக்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்துவரியினை சொத்து உரிமையாளர்கள் எளிதாக செலுத்தும் வகையில், சீராய்வு அறிவிப்புகளில் tiny.url மற்றும் QR Code ஆகிய வழிமுறைகள் மற்றும் வசதிகள் மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி அவர்களின் பெயரில் காசோலைகள் மற்றும் வரைவோலைகள், கடன்/ பற்று அட்டை மூலமாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் வரி வசூலிப்பவர்களிடம் செலுத்தி, செலுத்தப்பட்டதற்கான வரிசீட்டினை பெற்றுக் கொள்ளலாம்.

சென்னை மாநகராட்சியின் வலைத்தளம் www.chennaicorporation.gov.in மூலமாக எவ்வித பரிமாற்ற கட்டணமில்லாமல் சொத்துவரி செலுத்தலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் மூலம் நேரடியாக பணமாகவும் சொத்துவரி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
CineDesk