தீராத சளி தொல்லையை தவிடு பொடியாக்க அதிமதுரத்தை இப்படி யூஸ் பண்ணி பாருங்கள்!! 

0
136
Try using licorice like this to treat persistent colds.
Try using licorice like this to treat persistent colds.

நம் முன்னோர்கள் அதிமதுரத்தை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.அதிமதுரத்தில் ஏகப்பட்ட நோய்களை தீர்கின்ற ஆற்றல் இருக்கிறது.இதில் இருக்கின்ற ஆன்டிஸ்பாஸ்மோடிக் உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்கிறது.நாட்டு மருந்து கடையில் இது பொடியாக கிடைக்கிறது.

அதிமதுரத்தின் பயன்கள்

1)சளி,இருமல் குணமாக அதிமதுரத்தை பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிடலாம்.அதிமதுரப் பொடியை வெந்நீரில் கலந்து குடித்தால் நெஞ்சில் கோர்த்திருக்கும் சளி கரைந்து வெளியேறும்.

2)சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் வெந்நீரில் அதிமதுரப் பொடி மற்றும் தேன் கலந்து குடித்தால் தீர்வு கிடைக்கும்.இந்த பானம் ஒற்றை தலைவலி,தலைபாரம் போன்றவற்றை குணமாக்க உதவுகிறது.

3)அதிமதுரப் பொடியில் கடுக்காய் தோல் பொடி மற்றும் மிளகுப் பொடி செர்த்து வாயில் போட்டு சிறிது நேரம் அடக்கி வைத்தால் வறட்டு இருமல் சரியாகும்.

4)வயிறு புண்கள் ஆற,நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அதிமதுரப் பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.

5)வயிறு புண்கள் ஆற அதிமதுரப் பொடியை குளிர்ந்த நீரில் வெறும் வயிற்றில் கலந்து குடிக்க வேண்டும்.

6)கருப்பையில் தேங்கிய அழுக்குகள் நீங்க அதிமதுரப் பொடியை பாலில் கலந்து குடிக்க வேண்டும்.

7)அதிமதுரப் பொடியை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

8)பெண்களுக்கு மலட்டு தன்மை நீங்க அதிமதுரப் பொடியுடன் உலர் திராட்சையை சேர்த்து சாப்பிட வேண்டும்.

Previous articleபெண்களே நம்புங்க.. பூண்டு பற்களை இப்படி சாப்பிட்டால்.. அடுத்த மாதமே கர்ப்பமாகிடுவீங்க!!
Next articleஇந்த 10 பாட்டி வைத்திய டிப்ஸ் தெரிந்தால் இனி மருத்துவரை சந்திக்க வேண்டியதில்லை!!