டிடிவி.தினகரன் தி.மு.க.வுடன் கூட்டணியா? அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்
அதிமுகவிலிருந்து பிரிந்த அமமுக என்ற தனிக்கட்சியை ஆரம்பித்த டிடிவி தினகரன் அதிமுகவின் எதிரியான திமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.இன்று விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது.
பால்வளத்துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்று வந்துள்ளேன். இந்த வெளிநாட்டு சுற்றுப் பயணம் மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது.
அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று கால்நடை வளர்ப்பு தீவன உற்பத்தி போன்றவற்றை அறிந்து வந்துள்ளேன்.
பால்வளத் துறை சார்பில் சேலம் மாவட்டத்தில் கால்நடை ஆராய்ச்சி மையம் பசு வளர்ப்பு இனவிருத்தி, தீவன உற்பத்தி ஆகியவற்றை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் பால்பண்ணை அமைக்கப்படும்.
ஸ்டாலினை தவிர சமூக ஆர்வலர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் எங்களது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை வரவேற்கிறார்கள்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளி நாட்டுக்கு சென்று ரூ. 2850 கோடி அளவில் தமிழகத்துக்கு முதலீட்டை ஈர்த்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் புதிதாக ஜவுளி தொழிற்சாலை அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இது சம்பந்தமாக முதல்- அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.ஜி.ஆர். ரசிகர் இல்லை. சிவாஜி கணேசன் ரசிகர்.
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து வளர்த்த கட்சியான அ.தி.மு.க.வை அவர் எதிர்க்கிறார். அ.தி.மு.க.வின் எதிரியான தி.மு.க.விடம் மறைமுக கூட்டணி வைத்துள்ளார்.
தினகரனின் உண்மையான நிலைப்பாடு தெரிந்து தான் நாஞ்சில் சம்பத் அவரை விட்டுச் விலகி சென்று விட்டார். அடுத்து புகழேந்தியும் புலம்பிக் கொண்டுள்ளார் என்றும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.