துளசியில் இவ்வளவு மருத்துவ குணங்களா?

Photo of author

By Gayathri

துளசியில் இவ்வளவு மருத்துவ குணங்களா?

சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை  துளசியை அரைத்து கஷாயமாக கொடுத்தால் போதும் சளி இருமல் போய்விடும்.

துளசி மன இறுக்கம் மற்றும் மன அழுத்தம் நீக்கும்,நரம்புக் கோளாறு பிரச்சனைக்கு நல்லது, ஞாபகச் சக்தி இன்மை உள்ளவர்கள் தினமும் இலைகளை சாப்பிடுவரலாம்,ஆஸ்துமா, இருமல் மற்றும் தொண்டை வலி உள்ளவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

காய்ச்சல் இருக்கும் போது,துளசி இலையை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர துளசியானது காய்ச்சலை குறைத்துவிடும்.

தலைவலிக்கு நெற்றியில் துளசியை கொண்டு பற்று போட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, உடல் சூடும் குறையும்.

வாய் துர்நாற்றம் அடித்தாலோ, ஈறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ துளசி சாப்பிடலாம்.

நீரிழிவு நோயாளிகள் துளசி இலையை சாப்பிட்டு வந்தால் நல்லது.

சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தாலும் துளசியை சாப்பிட்டு வர குணமாகும்.