தமிழ் சினிமாவில் மீராமிதுன் என்றாலே அடுத்து என்ன புதுசா கிளப்பி இருக்காங்கன்னு கேட்கிற அளவுக்கு சர்ச்சையின் முடிசூடா நாயகி விளங்குகிறார் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு மும்பையில் செட்டில் ஆகி இருக்கிறார் மீராமிதுன். மீரா மிதுன் கோலிவுட் போரடித்துப் போய் பாலிவுட், ஹாலிவுட் படங்களில் இனி கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் தொடர்ந்து ட்விட்டரில் விளாசி கொண்டிருந்தார் மீரா. அவர் பேசுவதை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் அவர் பாலிவுட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டார்.
மீரா மிதுன் விஜய், சூர்யா, கமலஹாசன், ரஜினிகாந்த் போன்ற தமிழ் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களை ட்விட்டரில் விளாசி அவர்களது ரசிகர்களின் கடும் கோபத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.
இவ்வாறு இருக்கையில் திடீரென மீரா ஒரு வாலிபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்ட couple சேலஞ்ச் Accepted என்று தெரிவித்து இருக்கிறார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பார்த்தவர்கள் பலரும் ‘இந்த பையனைத்தான் திருமணம் செய்ய போறீங்களா? அவன பாத்தா சின்ன பையன் மாதிரி இருக்கு. பாவம் விட்டுருங்க!’ என கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் சிலரோ ‘சின்னப்பையன் வாழ்க்கையில விளையாடாதீங்க’ என்றும் தெரிவித்து வருகின்றனர். மேலும் சில மாதங்களுக்கு முன்பு அவர் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/meera_mitun/status/1309774051200565248?s=20