அக்.1 முதல் பள்ளிகள் திறப்பு:!! மாணவர்கள் இதை வைத்திருந்தால் மட்டுமே பள்ளிக்குள் அனுமதி!

0
57

அக்.1 முதல் பள்ளிகள் திறப்பு:!! மாணவர்கள் இதை வைத்திருந்தால் மட்டுமே பள்ளிக்குள் அனுமதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து பள்ளி கல்லூரிகளும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து மூடப்பட்டிருக்கின்றன.ஆனால் மாணவர்களின் நலனைக் கருதி,ஆன்லைன் வாயிலாகவும் டிவி வாயிலாகவும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
இதுமட்டுமின்றி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பாடச் சுமையை குறைக்கும் வகையில் பொது தேர்வு பாடங்கள் 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளன.இருந்த பொழுதிலும் மாணவர்கள் பள்ளிக்கு நேரடியாகச் சென்று தங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளும் அளவிற்கு ஆன்லைன் வகுப்போ அல்லது தொலைக்காட்சி வகுப்பு கைகொடுக்கவில்லை.தற்போது தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் எட்டாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்,மத்திய அரசு அனுமதி அளித்ததன் அடிப்படையில் வருகின்ற அக்டோபர் மாதத்திலிருந்து மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அக்டோபர் 1ம் தேதி முதல் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு செல்லலாம் என்றும்,ஆசிரியர்களிடம் தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்றும் அரசு அனுமதி அளித்துள்ளது.ஆனால் இவ்வாறு பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து உள்ளது.இந்த இரண்டு குழுக்களின் அடிப்படையில்,பள்ளிக்குச் செல்லும் நாட்கள் வரையறுக்கப்பட்டுள்ளது.

அதாவது முதல் குழு மாணவர்கள் திங்கள்,புதன் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களிலும்,இரண்டாவது குழு மாணவர்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை நாட்களிலும் பள்ளிக்கு செல்ல அனுமதி அளித்துள்ளது.
அதேபோன்று ஆசிரியர்கள் முதல் குழு திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளிலும், இரண்டாவது குழு புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மீண்டும் முதல் குழு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஆகிய நாட்களில் ரொட்டேஷன் முறையில் வரவும் விதிகள் கூறப்பட்டுள்ளது.நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இதுபோன்று குழுகள் முறையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிக்கு வரவிருக்கும் மாணவர்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசின் உத்தரவுப்படி தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

author avatar
Pavithra