துன்பத்தை போக்கும் தும்பை பூ.. இந்த நோய்களை எல்லாம் அடிச்சி தூக்கும் பெஸ்ட் மருந்து இது மட்டுமே!!

Photo of author

By Divya

நம் கிராமப்புறங்களில் வயல் ஓரத்தில் தும்பை எனும் மூலிகை செடியை அனைவரும் பார்த்திருப்பீர்கள்.இந்த தும்பை பூவில் ஒரு வித இனிப்பு திரவம் இருக்கும்.இந்த தும்பை செடியின் வேர்,இலை,பூ என்று அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தவையாகும்.தும்பை பூ உடல் நோய்கள் பலவற்றிற்கு அருமருந்தாக திகழ்கிறது.இந்த தும்பை செடியின் பூக்கள் மற்றும் இலைகளை கொண்டு தற்பொழுது பல நோய்களுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது.

தும்பை பூ மற்றும் தும்பை இலையை வைத்து எந்த நோய்களை மருந்து மாத்திரை இன்றி குணப்படுத்திக் கொள்ளலாம் என்பதை இங்கு விரிவாக காணலாம்.

தலைவலி

தங்களுக்கு தேவையான அளவு தும்பை பூ எடுத்து கல்வத்தில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு தாளிப்பு கரண்டியில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.அதன் பின்னர் தும்பை பூ விழுதை அதில் போட்டு காய்ச்சி ஆறவைத்து நெற்றி மீது தடவினால் தலைவலி பாதிப்பு குணமாகும்.

காய்ச்சல்

தும்பை பூவை சேகரித்து பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து சிறிதளவு தேன் குழைத்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குணமாகும்.

நெஞ்சு சளி

ஒரு கிளாஸ் அளவு பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கி கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தும்பை பூ சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் நெஞ்சு சளி பாதிப்பு குணமாகும்.

மூக்கில் இரத்தம் வடிதல்

வெள்ளை தும்பை பூ மற்றும் தும்பை இலைகளை மைய்ய அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இந்த சாறை மூக்கு துவாரத்தில் விட்டால் இரத்தம் வடிதல் பிரச்சனை சரியாகும்.

விஷக் கடி

தும்பை பூவை பேஸ்ட் பதத்திற்கு அரைத்து விஷக்கடி ஏற்பட்ட இடத்தில் பூசினால் சில நிமிடங்களில் விஷம் முறிந்துவிடும்.

இளைப்பு

ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி தும்பை பூ போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் இளைப்பு ஏற்படுவது கட்டுப்படும்.

வறட்டு இருமல்

தும்பை பூவை அரைத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பருகி வந்தால் வறட்டு இருமல் பாதிப்பு குணமாகும்.தும்பை பூக்களை அரைத்து சாறு எடுத்து மூக்கில் விட்டால் கடும் தலைவலி பாதிப்பு குணமாகும்.

மூக்கடைப்பு

பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.அடுத்து அதில் சிறிதளவு தும்பை பூ மற்றும் கற்பூரம் சேர்த்து கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் மூக்கடைப்பு பிரச்சனை சரியாகும்.