வெறும் மஞ்சள் போதும்! உங்கள் மஞ்சள் பற்கள் கறையை நீக்கி விடலாம்!

Photo of author

By Kowsalya

 

சிரிக்கும்போது பற்கள் அழகாக தெரிய வேண்டும் என்பது அனைவருடைய ஆசையுமே. பற்கள் மஞ்சள் கரையுடன் இருந்தால் பார்ப்பவர்களுக்கும் கஷ்டம். பேசும் நமக்கும் தாழ்வு மனப்பான்மையோடு இருக்கும்.அதை போக்குவதற்கான அருமையான டிப்ஸ் அதுவும் மஞ்சள் பொடி இருந்தால் போதும் உங்களுடைய மஞ்சள் கரைக்கு பாய் பாய் சொல்லலாம்.

தேவையான பொருள்

கடைகளில் விற்கும் மஞ்சள் பொடியை வாங்காதீர்கள் அதில் ரசாயன கலப்பு ஏற்படும் இயற்கையான மஞ்ளை பயன்படுத்துங்கள்.

செய்முறை

உங்கள் டூத் பிரஷை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஈரப்படுத்திக் கொள்ளுங்கள். மிக குறைவான அரை கால் பங்கு (1/8) மஞ்சள் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு மஞ்சளை தொட்டு மென்மையாக பிரஷ் செய்யுங்கள்.

உடனே வாய் கழுவ கூடாது. பிரஷ் செய்த பிறகு 3-5 நிமிடங்கள் அந்த மஞ்சள் பற்களில் இருக்க வேண்டும். மீண்டும் பல் துலக்குங்கள். 5 நிமிடங்கள் கழித்து நன்கு வாய் கழுவி கொள்ளுங்கள். பிறகு சாதாரண பல் போடி அல்லது டூத் பேஸ்ட் கொண்டு மீண்டும் பல் துலக்குங்கள். இது வாயில் வீசும் அந்த மஞ்சளின் வாசத்தை போக்கும்.

ஒரு வாரம் தொடர்ந்து இதை பின்பற்றி வந்தால் பற்களில் படிந்திருக்கும் அந்த மஞ்சள் கறையை எளிதாக போக்கிவிடலாம். நீங்கள் இதை பின்பற்றிய முதல் நாளிலேயே உணர்வீர்கள்.