10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நாளை தொடங்குகிறது திருப்புதல் தேர்வு!

0
196

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நாளை தொடங்குகிறது திருப்புதல் தேர்வு!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த மாதம் இறுதி வரை மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் தமிழகத்தில், கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த சில நாட்களாக, குறைந்து வருகிறது. இதன் காரணமாக, இந்த மாதம் 1-ந் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஜனவரியில் நடைபெறுவதாக இருந்து ஒத்திவைக்கப்பட்ட திருப்புதல் தேர்வுக்கான திருத்தம் செய்யப்பட்ட புதிய தேர்வு அட்டவனையை தேர்வுத்துறை இயக்குனரகம் சமீபத்தில் வெளியிட்டது.

அதன்படி, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து இரண்டாம் திருப்புதல் தேர்வு அடுத்த மாதம் 28ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 9-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை முதல் திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது. மார்ச் மாதம் 28ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி வரை இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

இதுபோல் 10ஆம் வகுப்பிற்கு இந்த மாதம் 9ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை முதல் கட்ட திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து அடுத்த மாதம் மார்ச் 28-ல் தொடங்கி ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, திருப்புதல் தேர்வு நாளை மறுநாள் மீண்டும் தொடங்க உள்ளது. மேலும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்படி நடத்தப்படுமோ, அது போன்று அனைத்து கட்டுப்பாடுகளுடன் திருப்புதல் தேர்வை நடத்த வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous articleசென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் வரலாற்றிலேயே முதல் முறையாக…! வெளியான ருசிகர தகவல்!
Next articleஇவரை யாரும் சரியாகப் புரிந்து கொள்வதே இல்லை! – நடிகர் ஸ்ரீகாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here