3 வயது குழந்தையின் மேல் விழுந்த டிவி! சார்ஜில் இருந்த செல் போனை எடுக்க முயன்றதால் குழந்தை பலி!
சார்ஜில் போடப்பட்டிருந்த செல்போனை எடுக்க முயன்று அலமாரியில் இருந்த டிவி தலையில் விழுந்து குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் அகரம் பகுதியில் வாழ்ந்து வருபவர் பாலாஜி. இவரது மூன்று வயது மகன் கவியரசு. நேற்று இரவு பாலாஜி போனில் சார்ஜ் இல்லாததால் சார்ஜில் செல்போனை போட்டு வைத்துள்ளார்.
அப்பொழுது செல்போனிற்க்கு யாரோ அழைப்பு விடுக்க குழந்தை ஓடிச்சென்று செல்போனை எடுக்க முயன்றபோது சார்ஜர் ஒயர் அலமாரியில் உள்ள டிவியில் மாட்டி குழந்தை மீது விழுந்துள்ளது.
இதனால் பலத்த காயமடைந்த குழந்தையை அவரது அப்பாவான பாலாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உதவி கொண்டு சென்றபோது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சேலையூர் போலீசார் குழந்தை இறந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ளோரை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.