ஸ்கூட்டரில் உலா வரும் டிவிகே தலைவர்.. இணையத்தில் வரலாகும் வீடியோ காட்சி!!

ஸ்கூட்டரில் உலா வரும் டிவிகே தலைவர்.. இணையத்தில் வரலாகும் வீடியோ காட்சி!!

அரசியல் களத்தில் கால் பதிக்கும் விஜய் தான் கமிட்மென்ட் கொடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.மேற்கொண்டு சட்டமன்ற தேர்தலையடுத்து முழு மூச்சாக அரசியலில் இறங்கப்போவதாகவும் இனி படங்களில் நடிக்க போவதில்லை என்றும் கூறியுள்ளார்.அந்தவகையில் கோட் படப்பிடிப்பானது தற்போது நடைபெற்று வருகிறது.

கோட் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்,  ப்ரீ ஸ்டைல் ஸ்கூட்டரில்  ஜாலியாக ரவுண்டு அடித்து மகிழ்ந்த வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.வெங்கட் பிரபு இயக்கத்தில் “தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்” என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இதன் ஆரம்பக்கட்ட படப்பிடிப்பு,  கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெற்று வந்தது.இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு தலைநகரான மாஸ்கோவில்  பரபப்பாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், நடிகர்  விஜய் ப்ரீ ஸ்டைல் ஸ்கூட்டரில் அங்கு ஜாலியாக உலா வந்து மகிழ்ந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.