பேர மட்டும் கெத்தா வச்சிக்கிட்டா போதுமா!.. ஸ்டாலினை கிழித்த விஜய்…

Photo of author

By Murugan

பேர மட்டும் கெத்தா வச்சிக்கிட்டா போதுமா!.. ஸ்டாலினை கிழித்த விஜய்…

Murugan

vijay

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் இன்று காலை துவங்கியது. இந்த கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். பொதுக்குழு கூட்டத்தின் முதல் வரிசையில் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரும், அம்மா ஷோபாவும் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. விஜயும் அவர்களின் அருகில் சென்று கட்டிதழுவி வரவேற்றார். கூட்டம் துவங்கியதும் தவெக பொதுக்குழு உறுப்பினர்களுடன் நெஞ்சில் கை வைத்து உறுதி மொழி ஏற்றார் விஜய்.

இந்த பொதுக்குழுவில் இருமொழிக்கொள்கை, டாஸ்மாக் ஊழல், தொகுதி மறுவரையறை, பரந்தூர் விமான நிலையம், சாதி வாரிக் கணக்கெடுப்பு போன்ற 17 தீர்மானங்கள் தவெக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் பேசிய தவெக நிர்வாகிகள் விஜயை புகழ்ந்தும் திமுக அரசை விமர்சித்தும் பேசினார்கள்.

அதன்பின் பின் பேசிய விஜய் வழக்கம்போல் திமுகவை விமர்சித்து பேசினார். மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பெயரை மட்டும் வீரப்பாக சொன்னால் போதாது அவர்களே. செயலிலும் காட்ட வேண்டும் அவர்களே.. அணை போட்டு ஆற்றை வேண்டுமானாலும் தடுக்கலாம்.. காற்றை தடுக்க முடியாது. மீறி தடுக்க நினைத்தால் சாதாரண காற்று சூறாவழியோ அல்லது சக்திமிக்க புயலாக மாறும்’ என பேசினார்.

அப்படியே பாஜக பற்றியும் பேசிய விஜய்.. ‘ஏன் ஜி.. தமிழ்நாடு என்றால் மட்டும் உங்களுக்கு ஏன் அவ்வளவு அலர்ஜி?’ என மோடியை விமர்சித்த விஜய் தமிழ்நாட்டை மிகவும் கவனமாக கையாளுங்கள்.. தமிழ்நாடு பல பேருக்கு தண்ணி காட்டுன மாநிலம் சார், கொஞ்சம் பார்த்து பண்ணுங்க சார் என ரைமிங்காக பேசினார் விஜய்;. மேலும், திமுகவின் சீக்ரெட் ஓனர் மோடிதான். மோடியின் பெயரை சொல்வதற்கு எங்களுக்கு எந்த பயமும் இல்லை.

மக்களை நாம் சந்தித்து குறைகளை கேட்டால் ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும் தவெக கொடி தானாக பறக்கும். நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தியிருந்தால் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்திருக்கும். தமிழ்நாட்டின் சகோதரிகள்தான் திமுகவின் அரசியலுக்கு முடிவு கட்ட போகிறார்கள்’ என பேசினார்.