சமூக ஊடகத்தில் தற்காலிகமாக முடக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை நேற்று ட்விட்டர் அதனை மீண்டும் செயலாக்கத்திற்கு கொண்டு வந்துள்ளது. முடக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு ராகுல் காந்தியின் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது..
எதற்காக அவரது கணக்கு முடக்கப்பட்டது என்றால், டெல்லியில் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட 9 வயது பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தின் படங்களை காங்கிரஸ் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு டுவிட்டர் விதிகளை மீறியதால் மூடக்கபட்டதாக சொல்லப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது படங்களை மற்ற காங்கிரஸ் தலைவர்களும் தனது டுவிட்டர் பக்கங்களில் பகிர்ந்தால் அவர்களது கணக்குகள் முடக்கப்பட்டன. இப்பொழுது அந்த காங்கிரஸ் தலைவர்களின் கணக்குகளும் மீட்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவருடைய சொந்த அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் இருந்து ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் அறிக்கை வெளியிட்ட ஒரு நாள் கழித்து டிவிட்டர் ஒரு பக்கச்சார்பான தளம் என்று குற்றம் சாட்டினார். மேலும், அன்றைய அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதை மட்டுமே கேட்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.