ஆன்லைன் மூலம் இரண்டரை லட்சம் கொள்ளை:அதிர்ச்சியில் பொதுமக்கள்

தஞ்சாவூர் ரயில் நகரில் வசித்துவந்த ஆயூப் என்பவர், கடல் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கப்பலில் பணி இல்லாததால், தனது சொந்த ஊரில் வசித்து வந்தார்.இந்நிலையில் நேற்று அவரது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 40 ஆயிரம் பணம் நான்கு தவணையாக எடுத்தது தெரியவந்தது.இதனை கண்ட ஆயூட் என்பவர் வங்கிக்கு சென்று புகார் அளித்துள்ளார். ஆனால் வங்கியில் இதற்கு சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை.இதனையடுத்து அவரது ஏடிஎம் கார்டுகளை பிளாக் செய்ய வங்கி ஆணையரிடம் எழுதிக் கொடுத்துள்ளார்.

இந்த செயலை போலவே ஓய்வுபெற்ற வங்கி மேலாளர், வடிவமைப்பு கோட்ட அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தவர், பொதுப்பணித்துறை திட்ட அதிகாரி போன்ற 6 பேரின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 2 லட்சத்திற்கும் மேலாக மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.இவர்கள் 6 பேரும் தேசியமயமாக்கப்பட்ட ஒரே வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே இதுபோன்ற மோசடி நடந்திருந்தால் மொபைல் எண்ணுக்கு ஓடிபி மற்றும் பாஸ்வேர்டு வரும். ஆனால் தற்பொழுது எதுவும் வராமல் மர்மமான முறையில் பணத்தை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இச்செயலுக்கு தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இச்சம்பவம் அட் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment