கொச்சியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட காரிலிருந்து 177 கிலோ கஞ்சா கண்டுபிடித்த வழக்கில் இருவர் கைது. மற்றொரு கூட்டாளி 16 கிலோ கஞ்சாவுடன் போலீசார் கைது செய்தால் காரை வீட்டு சென்றனர்.
கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள வாடகை கார் நிறுவனத்தில் கடந்த மாதம் 30 தேதி கடவந்திரா பகுதியை சேர்ந்த இருவர் ஒரு காரை வாடகைக்கு எடுத்துள்ளார். பின் வாடகை கார் நிறுவனத்திற்கு காரை கொடுக்காததாலும் அவர்களை பற்றி எவ்வித தகவலும் இல்லாததால் காரை தேடியுள்ளனர்.
அப்பொழுது காரின் ஜிபிஎஸ் வைத்து கார் கொச்சி பள்ளுருந்தி பகுதியில் இருப்பதை கடந்த 8 தேதி கண்டுபிடித்து காரை மீட்க சென்ற போது .கார் சாலையோரம் கடந்த இரு தினங்களாக நிற்பதாக அப்பகுதியில் மக்கள் தெரிவித்தனர்.
காரை திறந்து பார்த்தபோது நான்கு சாக்குகள் வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சந்தேகத்தின் அடிப்படையில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து சோதனை செய்த போது நான்கு சாக்குகளில் சுமார் 177 கிலோ கஞ்சா இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் ஷஜீர், ஷெமீர் என்ற இருவரை கைது செய்துள்ளனர். கடந்த 5ம் தேதி அம்பலம்மேட்டில் 16 கிலோ கஞ்சா கஞ்சாவுடன் அக்ஷய் ராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவரின் கூட்டாளிகள் தான் ஷஜீர், ஷெமீர் ,அக்ஷய் ராஜ் போலீசார் பிடிபட்டதால் இவர்கள் இருவரும் காரைக் கைவிட்டுச் சென்றது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்