இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்!! திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பிய போது நிகழ்ந்த பரிதாபம்!! 

Photo of author

By Amutha

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்!! திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பிய போது நிகழ்ந்த பரிதாபம்!! 

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 12 பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஓடிஸா மாநிலத்தில் உள்ள திகபகண்டி  என்ற பகுதியைச் சேர்ந்த திருமண வீட்டார் நேற்று பெர்காம்பூர் நகருக்கு தனி பஸ்ஸில் சென்றனர். அங்கு நடந்த திருமண விழாவில் அவர்கள் கலந்துக் கொண்டு மாலை அவர்கள் வந்த பஸ்ஸிலேயே சொந்த  ஊருக்கு திரும்பினர்.

அந்த பஸ் இன்று அதிகாலை அளவில் திகபகண்டி – பெர்காம்பூர் சாலையில் வந்து கொண்டிருந்தது. அதேபோல எதிரே பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணிகள் பஸ் வந்துக்கொண்டிருந்தது. அப்போது திடீரென கண் சிமிட்டும் நேரத்தில் இரண்டு பஸ்களும் பயங்கர சத்தத்துடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.

இந்த பயங்கர விபத்தில் திருமண வீட்டார் வந்த பஸ் கடுமையாக பாதிக்கப்பட்டு நொறுங்கியது.  இரண்டு பஸ்ஸின் உள்ளே இருந்த 100க்கும் மேற்ப்பட்ட பயணிகள் இடிபாடுகளில் சிக்கி கூச்சலிட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.

இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை தீயணைப்புத் துறையினர் போலீசார்  விரைவாக செயல்பட்டு மீட்டனர். அதன் பின்னர் 12 பேர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தது தெரிய வந்தது.

மேலும் விபத்தில் காயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.  இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.