மகாராஷ்டிராவில் ஊர்வலத்தின் போது கொடிக் கம்பத்தில் மின்சாரம் தாக்கி இருவர் பலி!! ஐவர் காயம்!!

Photo of author

By Savitha

மகாராஷ்டிராவில் ஊர்வலத்தின் போது கொடிக் கம்பத்தில் மின்சாரம் தாக்கி இருவர் பலி ஐவர் காயம்.

பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

மகாராஷ்டிரா மாநிலம் விரார் டவுன் பகுதியில் பாபாசாகிப் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் வாகனத்தில் கட்டப்பட்டுள்ள கொடிக்கம்பம் மின்மாற்றின் மீது மோதியதில் மின்சாரம் தாக்கி இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு விரார் டவுன் பகுதியில் உள்ள கார்கில் நகர் பகுதியில் ஊர்வலம் ஒன்று நடைபெற்றது.

ஊர்வலம் நேற்று இரவு 10:30 மணியளவில் நிறைவடைந்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

அப்போது வாகனம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த கொடிக்கம்பம் அங்கிருந்த மின்மாற்றில் தவறுதலாக உரசியதால் மின்சாரம் தாக்கி இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

இந்த சம்பவத்தில் மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.