‘சூப்பர்ஸ்டாரா இல்லன்னா தல அஜித்தா?’ ரசிகர்கள் குழப்பம்!! ஒரே நாளில் இரு பிரபலங்களின் படம் ரிலீஸ்?!!

Photo of author

By Jayachithra

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ‘அண்ணாத்த’ படத்தில் மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு போன்ற பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மேலும், ரஜினி நடிக்கும் காட்சிகள் நான்கு நாட்கள் எடுக்க வேண்டி உள்ளது. அதனை கல்கத்தாவில் எடுக்க திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால், திடீரென அது தள்ளிப் போனது. விரைவில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முடிய உள்ள காரணத்தினால் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும், நவம்பர் 4 ஆம் தேதி படம் வெளியாக உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இது அனைத்தும் ஒரு பக்கம் இருக்க வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் துவங்கி ஒன்றரை வருடங்கள் ஆகின்றது.

ஆனால், கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டு, தற்போது இறுதி கட்டத்திற்கு வந்து உள்ளது. மேலும் சில காட்சிகளை வெளிநாட்டில் எடுக்க படக்குழுவானது திட்டமிட்டு இருந்தது. ஆனால், தற்போது இது சாத்தியமா? என்று படக்குழுவிற்கு தெரியவில்லை எனவே இந்தியாவிலேயே அந்த ஷாட்டை எடுக்க திட்டமிட்டு உள்ளனர் இந்த நிலையில் வலிமை படத்தையும் தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த வருடம் பொங்கலின் போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பேட்ட மற்றும் தல அஜித் நடித்த விசுவாசம் என இரண்டு திரைப்படங்களும் மோதியது குறிப்பிடத்தக்கது. இதில் பேட்டையை விடவும் விசுவாசம் அதிக வசூலை எட்டியது. தற்போது விஸ்வாசம் பட இயக்குனர் இயக்கிய ‘அண்ணாத்த’ படத்துடன் அஜித்தின் ‘வலிமை’ படமும் மோத உள்ளது.

எவ்வாறு இருந்தாலும் இரண்டு பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமையும் என்பது சந்தேகமே இல்லை. ஆனாலும் இரண்டு படங்களில் எந்த படம் அதிக வசூல் எட்டும் என்ற கேள்வி ரசிகர்களுக்கு இடையே எழுந்து வருகிறது.