மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் நல்வாழ்வு குறித்து பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் சார்பில் இலவச வீடு கட்டும் திட்டம் ஆனது வழங்கப்பட்டு வருகிறது. திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற கேள்விகள் மக்களிடையே அதிகமாக கேட்கப்படுகிறது. இதற்கான பதிலை இந்த பதிவில் காண்போம்.
இன்று வரை நாட்டில் பலர் குடிசை வீடுகளில் வாழ்கின்றனர். இத்தகைய நபர்களுக்கு நிரந்தர வீடுகள் கிடைப்பதற்காக இந்திய அரசு உதவி வருகிறது. அதற்காகத்தான் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை 2017-ஆம் ஆண்டில் அரசு தொடங்கியது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகளைப் பெற மக்கள் வருமானத்தின் அடிப்படையில் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரிவுகளின் கீழ் மக்கள் மானியத்துடன் கூடிய கடன் பெற முடியும்.
1 .EWS (பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவு)
2 .LIG (குறைந்த வருமானம் பெறுபவர்கள்)
3 .MIG (நடுத்தர வருமான பெறுபவர்கள்)
இதில் MIG I பிரிவினர்கள் ரூ. 6 முதல் ரூ. 12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம் பெற வேண்டும். இந்த பிரிவினர் மானியத்துடன் கூடிய கடன் தொகையாக ரூ.9 லட்சம் வரை பெற தகுதியுடையவர்கள். MIG I பிரிவினரின் ஆண்டு வருமானம் ரூ. 12 முதல் ரூ. 18 லட்சம் வரை இருக்க வேண்டும்.இந்த பிரிவினருக்கு மானியத்திற்காக அனுமதிக்கப்பட்ட கடன் வரம்பு ரூ.12 லட்சம்.
LIG பிரிவினரின் ஆண்டு வருமானம் ரூ.3 முதல் ரூ.6 லட்சம் வரை இருக்க வேண்டும். இவர்களுக்காக அனுமதிக்கப்பட்ட கடன் தொகை ரூ.6 லட்சம். EWS பிரிவினரின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை இருக்க வேண்டும். இவர்களுக்காக வழங்கப்படும் மானியத்துடன் கூடிய கடன் தொகை ரூ. 6 லட்சம் ஆகும். இந்த கடன்களுக்கு குறிப்பிட்ட விகிதங்களில் மானியம் வழங்கப்பட்டு வருகின்றன.
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் விதிகளின்படி :-
ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே திட்டத்தின் பலனை பெற முடியும். உதாரணமாக தந்தை மற்றும் மகன்கள் ஒன்றாக ஒரே வீட்டில் இருக்கும் பட்சத்தில் தந்தை அல்லது மகன் என ஒருவர் மட்டுமே திட்டத்தின் பலன்களை பெற முடியும். இரண்டு பேர் தனித்தனியாக இருக்கிறார்கள் என்றால் அவர்கள் இருவருக்கும் தனித்தனி ரேஷன் கார்டுகள் உள்ளது என்றால் இருவரும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.