இரண்டு மோட்டர்சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி!

Photo of author

By Parthipan K

இரண்டு மோட்டர்சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி!

Parthipan K

two-motorcycles-collided-head-on-in-an-accident-one-victim

இரண்டு மோட்டர்சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மருவூர்கோணம் பகுதியில் வசித்து வருபவர் பாகுலேயன்.இவர் முடி திருத்தம் செய்யும் தொழில் செய்து வருகின்றார்.நேற்று காலை வழக்கம் போல் அவருடைய பேரனை பள்ளியில் கொண்டு விடுவதற்காக மோட்டார் சைக்களில் சென்றுள்ளார்.அப்போது தக்கலை அருகே சாமிவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.அந்நிலையில் இவர்களுக்கு எதிரே மோட்டார் சைக்கிள் ஒன்று வந்து கொண்டிருந்தது.

அந்த பைக்கானது எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்று கொண்டிருந்த மோட்டர்சைகளின் மீது மோதியது.அப்போது பாகுலேயன் படுகாயம் அடைந்தார்.அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று  சேர்த்தனர்.அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக பகுலேயனை கேரளா மாநிலம் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.மேலும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் இந்த விபத்து குறித்து அவருடைய மகள் தக்கலை போலீசார்ரிடம் புகார் அளித்தார்.அந்த புகாரின் பேரில் மோட்டர்சைகளில் விபத்தை ஏற்படுத்திய குழிச்சல் பகுதியை சேர்ந்த ஜாண்சன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.