மே 10 ஆம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் இரண்டு புதிய வசதிகள் அறிமுகம்!!

Photo of author

By CineDesk

மே 10 ம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் இரண்டு புதிய வசதிகள் அறிமுகம்!!

தமிழ்நாட்டில் உள்ள  38 மாவட்டங்களில்  34,792 நியாயவிலை கடைகள் உள்ளது. இதில்  33,377 கடைகள் கூட்டுறவுத்துறை மூலம் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள  2.23 கோடி குடும்ப அட்டைகளின் மூலம்  7 கோடி பேர் பயனடைகின்றனர். இந்த நியாயவிலை கடைகள் மூலம் மக்களுக்கு  உணவு பொருட்கள் இலவசமாகவும், மலிவு விலையிலும் கிடைக்கிறது. மேலும் ஒரு சில குடும்பங்கள் 2 அல்லது  3 குடும்ப அட்டைகள் வைத்திருந்தனர். இப்படிப்பட்ட போலி அட்டைகளை கட்டுப்படுத்த, ஸ்கேன் செய்யும் முறையில் குடும்ப அட்டைகளையும், பயனாளர்களுக்கு பயோ மெட்ரிக் முறைகளையும் தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்தது. இதன் மூலம் போலி குடும்ப அட்டைகள் கட்டுப் படுத்தப்பட்டது

நேற்று விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டுறவு வங்கியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது நியாயவிலை கடைகளில் ஆவின் பொருட்களை விற்பனை செய்யவும்,  ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு சேவையும் (UPI) தொடங்க உள்ளதாகவும் இது வரும் மே 10 ஆம் தேதிக்குள் அனைத்து நியாயவிலை கடைகளிலும் அமலுக்கு வரும்.  பிறகு பயனாளர்கள் UPI சேவையை பயன்படுத்தி பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என் கூறினார்.