புதிதாக கட்டப்பட்ட இரண்டு மேம்பாலங்கள் இன்று திறப்பு!

Photo of author

By Parthipan K

செங்கல்பட்டு மாவட்டம், தேசிய நெடுஞ்சாலையில் ரூபாய் 55 கோடி செலவில் வண்டலூர் உயிரியல் பூங்கா சந்திப்பில் ஆறு வழி பாதைகள் கொண்ட உயர்நிலை மேம்பாலம் கட்டப்பட்டது. மேலும்  பல்லாவரத்தில் உள்ள ஜிஎஸ்டி ரோடு, சந்தை ரோடு, குன்றத்தூர் ரோடு  ஆகியவற்றை இணைத்து ரூபாய் 82 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது. 

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் இந்த மேம்பாலங்கள் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் என்பவரும் ரவிச்சந்திரன் என்பவரும் ஆய்வு மேற்கொண்டனர்.  ரவிச்சந்திரன் என்பவர்  தாம்பரத்தில் வருவாய் கோட்டாட்சியர் ஆவார். 

இவ்விரண்டு மேம்பாலங்களும் முதலமைச்சர்  எடப்பாடி  K.பழனிசாமி அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாலங்கள் மக்களுக்கு போக்குவரத்து பயணங்களை எளிமையாக்கும்.

அதாவது  மேம்பாலங்களில் செல்வது மூலம்  குறிப்பிட்ட இடத்திற்கு குறைந்த நேரத்திலும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்ல முடியும். இதன் மூலம் விபத்துகளும் அதிகம் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்றே சொல்லலாம்.