சேலம் தாரமங்கலம் அருகே லாரி மோதி இருவர் பலி !

0
162

சேலம் தாரமங்கலம் அருகே லாரி மோதி இருவர் பலி !

 

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி என்பவர்,இவர் மனைவி மல்லிகா.இவர்கள் தாரமங்கலத்தில் மளிகை கடை நடத்தி வருகின்றனர்.
பழனிச்சாமி தனது மனைவிக்கு வண்டி ஓட்ட தெரியாது என்பதனால், செப்டம்பர் 10-ஆம் தேதி இரவு தனது மனைவிக்கு,அங்குள்ள பைபாஸ் ரோட்டில் ஸ்கூட்டர் ஓட்ட கற்றுக்கொடுத்திருந்தார்.

அப்பொழுது, இரவு 11 மணி அளவில் அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத லாரி ஒன்று,பழனிசாமியின் ஸ்கூட்டியில் மோதிவிட்டு,நிற்காமல் சென்றுவிட்டது.அடிபட்டு ரத்தவெள்ளத்தில் ரோட்டில் கிடந்த மல்லிகா மற்றும் பழனிச்சாமி ஆகிய இருவரையும் பார்த்து அந்த வழியாக சென்ற நபர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

ரோட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளின் அடிப்படையில் இடித்துவிட்டு நிற்காமல் சென்ற லாரியை போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

 

Previous articleகாங்கிரஸ் கட்சி பதவியில் இருந்து குலாம் நபி ஆசாத் நீக்கம்! கட்சியில் இருந்தும் வெளியேற்றப்படுகிறாரா?
Next articleராணுவ ஆயுத கிடங்கில் திடீர் வெடி விபத்து