ராணுவ ஆயுத கிடங்கில் திடீர் வெடி விபத்து

0
200
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஜோர்டானில் தலைநகர் அம்மானில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் நேற்று காலை இங்குள்ள ஒரு கிடங்கில் திடீரென பயங்கர வெடி விபத்து நேரிட்டது. ஆனால் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த கிடங்குகளுக்கும் பரவியதால் அங்கு சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் தொடர்ச்சியாக வெடித்துச் சிதறின. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. வான் உயரத்துக்கு தீப்பிழம்புகள் எழுந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலம் உருவானது.
இதனிடையே விபத்து நடந்த இடத்துக்கு பொதுமக்கள் செல்லாத வகையில் சர்கா நகருக்கு அதிகாரிகள் சீல் வைத்து போக்குவரத்தை தடை செய்துள்ளனர். முன்னதாக கடந்த மாதம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக கிடங்கில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து வெடித்து சிதறியதில் சுமார் 200 பேர் பலியானதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
Previous articleசேலம் தாரமங்கலம் அருகே லாரி மோதி இருவர் பலி !
Next articleஇறந்த மனுசனுக்கு இரங்கல் கூட தெரிவிக்காமல் லூட்டி அடித்த ரம்யா பாண்டியனை விளாசிய ரசிகர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here