விநாயகரை தூக்கி சென்ற இருவர் பலி!!அதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?

விநாயகரை தூக்கி சென்ற இருவர் பலி!!அதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?

ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதம் ஆவணியில் வருகின்ற  வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக  கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இதைத் தவிர தெரு முனைகளிலும் சாலைகளின் முக்கிய பகுதிகளிலும் பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பின்னர் அவை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் தூக்கி சென்று கரைக்கப்படும்.இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஊர் வலமாக விநாயகரை எடுத்து செல்லப்பட்டது.

பேருந்து நிலையம் அருகே உள்ள குலாவர் தெரு வளைவில் சப்பரத்தை திரும்பிய போது மரத்தில் மோதி நின்றது.அதனை தாண்டி செல்வதற்காக சென்ற போது அருகில் இருந்த விளம்பர பலகை சப்பரத்தில் விழுந்து மின்சாரம் தாக்கியது.இந்நிலையில் விளம்பர பலகை பிடித்திருந்த ஐந்து பேர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தனர்.விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் சொக்கநாதன்புத்தூர்  சேர்ந்த மாரிமுத்து,முனீஸ்வரன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது.மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Comment