காரின் ஹேண்ட் பிரேக்கின் கீழ் ரகசிய அறை அமைத்து ஆவணமின்றி பணத்தை கடத்திய இருவர் கைது 

Photo of author

By Savitha

காரின் ஹேண்ட் பிரேக்கின் கீழ் ரகசிய அறை அமைத்து ஆவணமின்றி பணத்தை கடத்திய இருவர் கைது

காரின் ஹேண்ட் பிரேக்கின் கீழ் ரகசிய அறை அமைத்து 1 கோடியே 68 லட்ச ரூபாய் மறைத்து கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள வளஞ்சேரி போலீசாருக்கு ஆவணங்கள் இன்றி பணம் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் வளஞ்சேரி பெரிந்தல்மன்னா சாலையில் வாகன தணிக்கையில் சோதனை நடத்தப்பட்டது.

சந்தேகத்திற்கிடமான வந்த காரை நிறுத்து போலீசார் சோதனை செய்த போது காரில் உள்ள ஹேண்ட் பிரேக்கின் கீழ் ரகசிய அறை அமைத்து அதில் எவ்வித ஆவணங்கள் இன்றி சுமார் 1 கோடியே 68 லட்ச ரூபாய் மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

காரில் வந்த யாஹியா, மன்சூர் ஆகிய இருவரையும் வளஞ்சேரி போலீஸார் கைது செய்தனர். எதற்காக இந்த பணம் கொண்டு வரப்பட்டது எங்கிருந்து யாருக்காக கொண்டு வரப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.