சென்னையில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்படும் – அமைச்சர் நிதின்கட்காரி தகவல்!

0
110

சென்னையில் இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகத்தில் இருந்து கட்டப்படுகின்ற இந்த மேம்பாலம் புறநகர் வரை சென்று முடியுமாம். 

இந்த மேம்பாலம் கட்ட படுவதன் மூலம் சென்னையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்துவிடும் என்பதனை உறுதியாக தெரிவித்துள்ளார். அமைச்சர் நிதின்கட்காரி அவர்கள் ஆர்.ஏ.புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இவற்றை தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமன்றி தமிழக அரசு ஒப்புதல் வழங்கிய பின்னரே இந்த மேம்பாலப் பணிகள் கட்ட துவங்கும் என்றும் இந்த மேம்பாலத்தை கட்டுவதற்காக 5000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மேம்பாலம் கட்டுவது குறித்த முடிவுகளை எடுப்பதற்கு முன்பு அமைச்சர் நிதின்கட்காரி தலைமையில், தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை திரட்டி தமிழகத்தில்  மேம்பாலம் கட்டும் பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது குறித்து அனைத்தையும் ஆலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பங்கேற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleமாஸ்டர் ப்ளான் போட்ட பாஜக! கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறிய தகவலால் பரபரப்பு!
Next articleசிகிச்சையில் இருக்கும் அமைச்சருக்கு – கண்ணீர் அஞ்சலி என்ற போஸ்டரை வெளியிட்டதால் பரபரப்பு!