பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு தமிழக தமிழர்கள் பலி!

0
247
#image_title

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு தமிழக தமிழர்கள் பலி.

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நேற்று காலை திடீரென ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 04 வீரர்கள் பரிதாபமாக பலியாகினர்.

பலியான நான்கு வீரர்கள் கிரினேடியர் சாகர் பன்னே,கிரினேடியர் கம்லேஷ்,யோகேஷ் குமார் மற்றும் சந்தோஷ் நக்ரால் என்பது தெரியவந்துள்ளது.

பதிண்டாவின் காவல் கண்காணிப்பாளர் அஜய் காந்தி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் பலியான நான்கு வீரர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் இறந்த யோகேஷ் குமார் தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மூணாண்பட்டியை சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் சேலம் மாவட்டம் மேட்டூர் வனவாசி அருகே உள்ள பனங்காட்டை சேர்ந்த கமலேஷ் என்பது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த வீரர்களுக்கு ஏற்கனவே நேற்று பிரேத பரிசோதனை நிறைவு பெற்றுள்ள நிலையில்
இறந்த ராணுவ வீரர்களின் உடல்கள் இன்று மாலை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

Previous articleபிபிசி நிறுவனத்திற்கு எதிராக அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கப்பதிவு!
Next articleராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்கள் போராட்டம்!!