பிபிசி நிறுவனத்திற்கு எதிராக அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கப்பதிவு!

0
205
#image_title

அந்நியச் செலாவணி விதிமுறைகளை மீறியதாக பிபிசி நிறுவனத்திற்கு எதிராக அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கப்பதிவு செய்துள்ளது.

குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது. இந்தியா: மோடி கேள்விகள் என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய முதல்-மந்திரியும் இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடி என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், பிபிசி ஆவணப்படத்தின் 2-ம் பகுதியில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து ரத்து, டெல்லி வன்முறை, குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்துள்ளது.

இதுபோன்ற சூழலில் பிபிசி நிறுவனத்துக்கு சொந்தமான டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த பிப்ரவரி 2-ஆவது வாரத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்நியச் செலாவணி விதிமுறைகளை மீறியதாக பிபிசி நிறுவனத்திற்கு எதிராக அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கப்பதிவு செய்துள்ளது.

author avatar
Savitha