காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை… பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை…

Photo of author

By Sakthi

காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை… பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை…

காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் பாதுகாப்புபடையினர் இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தில் தற்பொழுது பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் காஷ்மீர் காவல்துறையும், பாதுகாப்பு படையினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக சோதனை செய்து வந்தனர்.

புல்வாமா பகுதியில் தொடர்ந்து தேடுதலில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வந்தனர். அப்போது புல்வாமா பகுதியில் பரிஹம் கிராமத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்திய பொழுது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் தீடீரென்று துப்பாக்கி சூடு நடத்தினர்.

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு சண்டை பல மணி நேரம் நீடித்தது.

இறுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் தளபதி மற்றும் இன்னொரு பயங்கரவாதி என்று இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சூடு நடத்திய பகுதியில் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகின்றது.