இரண்டு பெண்கள் உயிருடன் புதைப்பு! பரபரப்பு சம்பவம்!

Photo of author

By Parthipan K

இரண்டு பெண்கள் உயிருடன் புதைப்பு! பரபரப்பு சம்பவம்!

Parthipan K

two-women-buried-alive-sensational-incident

இரண்டு பெண்கள் உயிருடன் புதைப்பு! பரபரப்பு சம்பவம்!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஹாரிபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தாலம்மா மற்றும் சாவித்திரி. இவர்களுக்கு சொந்தமான வீட்டுமனையை அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தராவ் ,பிரகாஷ்ராவ் மற்றும் ராமராவ் ஆகிய மூன்று பெரும் ஆக்கிரமிப்பு செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் தங்களின் வீட்டுமனைகளை மீட்டு தரக் கோரி இரண்டு பெண்களும் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என கூறி  வீட்டுமனையின் அருகில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது அந்த இடத்திற்கு வந்த ஆனந்தராவ் ,பிராகஷ்ராவ் மற்றும் ராமராவ் ஆகிய மூன்று பேரும் டிராக்டர்களில் மண்ணை கொண்டு வந்து அவர்கள் மீது கொட்டி உயிருடன் புதைத்து கொலை செய்ய முயற்சி செய்தனர்.அதனை கண்ட அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து மண்ணில் புதைந்த இரண்டு பெண்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு போராடி மீட்டனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பலாசா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண்களிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.மேலும் இரண்டு பெண்களை உயிரோடு புதைத்து கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.