ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை.. நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு!!

0
105

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை.. நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு!!

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் பொழுது மோடி சமூகம் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசினார். இதற்கு அப்போதே பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், பாஜக எம்எல்ஏ இது குறித்து ராகுல் காந்தி மீது வழக்கு தொடுத்தார்.

2019 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கானது கடந்த நான்கு ஆண்டுகளாகவே விசாரிக்கப்பட்ட வந்த நிலையில் தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் சற்று சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் மார்ச் மாதம்  இந்த வழக்கின் கீழ், குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக பேசிய காரணத்தினால் நீதிமன்றம் இவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

சிறை தண்டனையால் அவரின் எம்பி பதவியும் பறிக்கப்பட்டது. மேற்கொண்டு ராகுல் காந்தி ஜாமீன் கேட்டு மனு அளித்த நிலையில் அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும் இந்த சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி மேல்முறையீடும் செய்தார். அதுமட்டுமின்றி காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் பாஜகவிற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இந்த சிறை தண்டனை உத்தரவினால்  உடனடியாக அரசு பங்களாவை காலி செய்யும்படி மத்திய அரசு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது. மேல்முறையீடு வழக்கானது இன்று குஜராத் நீதிமன்றத்தில் அமர்வுக்கு வரவுள்ளது. ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு சிறை ரத்து செய்யப்படுமா என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Previous articleஎலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!!
Next articleரூ 210 செலுத்தினால் மாதம் 5000!! மத்திய அரசின் அசத்தல் திட்டம் உடனே விண்ணப்பியுங்கள்!!