பிரபல தமிழ் நடிகைகக்கு கோல்டன் விசா வழங்கிய அமீரக அரசு.!!

Photo of author

By Vijay

பிரபல தமிழ் நடிகைகக்கு கோல்டன் விசா வழங்கிய அமீரக அரசு.!!

Vijay

பிரபல தமிழ் நடிகை மீரா ஜாஸ்மினுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு அமீரக அரசு கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த கோல்டன் விசாவை பெறுபவர்கள் பத்து ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தில் குடிமகன்களாக கருதப்படுவார்கள். இதுவரை இந்தியாவில் இந்த கோல்டன் விசாவை பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், சஞ்சய்தத். மலையாள நடிகர்களான மோகன்லால், மம்முட்டி, துல்கர் சல்மான், பிரித்திவிராஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலாவுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரபல தமிழ் நடிகை மீரா ஜாஸ்மினுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. துபாயில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை மீரா ஜாஸ்மினுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இவர் தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து இவர் ஆயுத எழுத்து, புதிய கீதை, சண்டக்கோழி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.