ஆளுங்கட்சியை எச்சரித்த முக்கிய தலைவர்! அதிர்ச்சியில் திமுக!

0
83

சென்னை கேகே நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி வணிகவியல் துறை ஆசிரியர் ராஜகோபாலன் பள்ளியில் படித்துவரும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, இரு அர்த்தத்தில் சைகை மூலமாக ஆபாச பேச்சுக்களின் மூலம் பேசுவது , காணொளிகள் மூலம் தொடர்பு கொள்வது, இணையத்தில் அரைகுறை ஆடையுடன் தோன்றுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

இந்த நிலையில், அவருடைய நடவடிக்கையின் காரணமாக, பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.அதன்பின்னர் காவல்துறை அதிகாரிகள் ராஜகோபாலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறார்கள். அவரிடம் தொடர்ச்சியான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் பத்ம சேஷாத்ரி தொடர்பான விஷயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தற்சமயம் களமிறங்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சேஷாத்திரி பள்ளி விஷயத்தில் நியாயமான விசாரணை தேவைப்படுகிறது என்றும், உள்நோக்கத்துடன் அரசு செயல்படுவது தெரியவருமேயானால் தமிழக அரசை கலைப்பது தவிர வேறு வழி இல்லை என்று சுப்பிரமணியசாமி எச்சரிக்கை விடுத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக அவர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்த ஆசிரியர்கள், அர்ச்சகர்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இந்த விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு கவனம் செலுத்தி இதுபோன்ற செயல்பாடுகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இந்தப் பிரச்சனை தொடர்பாக தலைமைச் செயலாளருக்கு சம்மன் அனுப்பி அறிக்கை தயாரித்துக் கொடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் சுப்பிரமணிய சுவாமி திமுகவின் ஆட்சியை கலைக்க நேரிடும் என்று சொன்னது வெறும் மிரட்டல் ஆகவேதான் பார்க்கப்படுகிறது அதற்கான முகாந்திரம் எள்ளளவும் இல்லை என்பதுதான் உண்மை.