இன்ப நிதி குறித்து சுவாரசிய தகவலை கூறிய உதயநிதி ஸ்டாலின்! பேச்சை கேட்டு நெகிழ்ந்த ரசிகர்கள்!

Photo of author

By Parthipan K

இன்ப நிதி குறித்து சுவாரசிய தகவலை கூறிய உதயநிதி ஸ்டாலின்! பேச்சை கேட்டு நெகிழ்ந்த ரசிகர்கள்!

Parthipan K

Udayanidhi Stalin gave interesting information about welfare fund! Fans who were moved by the speech!

இன்ப நிதி குறித்து சுவாரசிய தகவலை கூறிய உதயநிதி ஸ்டாலின்! பேச்சை கேட்டு நெகிழ்ந்த ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் தனக்கென பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்ட தளபதி விஜய்யின் குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். அதன் பிறகு ஆதவன் படத்தில் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.மேலும் இவர் நான்கு படங்களை தயாரித்த பிறகு தான் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். அந்த படத்தை தொடர்ந்து மனிதன், கண்ணே கலைமானே, சைக்கோ, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களில் நடித்தார். மேலும் இந்த படங்கள் அவருக்கு நல்ல பெயரை கொடுத்தது.

தற்போது உதயநிதி அரசியலில் முழு ஈடுபாடு காட்டி வருவதினால் சினிமாவில் இனி நடிக்கப் போவதில்லை என தெரிவித்தார்.மேலும் உதயநிதி கிருத்திகா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இன்பா என்ற மகனும் தமன்யா என்ற மகளும் உள்ளனர்.அண்மையில் ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி பேசும் பொழுது அவருடைய மகன் குறித்தும் பேசியுள்ளார்.

தன்னுடைய மகனை அறிமுகம் செய்த போது அவர் ஒரு கால்பந்து வீரர் என்று சொன்னார்கள். ஆனால் அவர் டேபிள் டென்னிசும் ஆடுவார்.என்னுடைய வீட்டில் ஒரு டென்னிஸ் கோர்ட் இருக்கிறது. ஆனால் அதில் நான் அடிக்கடி விளையாட மாட்டேன்.

எப்போதெல்லாம் இன்ப நிதி துவண்டு போய் இருக்கிறாரோ அப்போது என்னுடன் விளையாட அவர் அழைப்பார். அப்போது நாங்கள் இருவரும் விளையாடும் பொழுது அந்த விளையாட்டில் என்னை தோற்கடிக்க செய்து அவர் கொஞ்சம் உற்சாகமடைந்து கொள்வார் என பேசினார்.