பந்தை சேதப்படுத்திய ஜடேஜா ஆஸ்திரேலிய மீடியாக்கள் குற்றச்சாட்டு! வெளிவந்த உண்மை தகவல்!  

0
186
#image_title

பந்தை சேதப்படுத்திய ஜடேஜா ஆஸ்திரேலிய மீடியாக்கள் குற்றச்சாட்டு! வெளிவந்த உண்மை தகவல்! 

நாக்பூரில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவரும் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலியா ஊடகங்கள் புகார் சாட்டியுள்ளன.

ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி ஜடேஜாவின் சுழலில் சிக்கி 177 ரன்களில் வீழ்ந்தது. இதில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த போட்டியில் ஜடேஜா விதியை மீறியதாக ஆஸ்திரேலிய மீடியாக்கள் குற்றம் சாட்டியுள்ளன.அப்போது பந்தை வைத்திருந்த ஜடேஜா, தனது விரலில் ஏதோ ஒன்றை தேய்க்கிறார். முகமது சிராஜிடம் இருந்து அதனை ஜடேஜா வாங்கி விரலில் தேய்ப்பது போல வீடியோவில் தெரிகிறது.

பந்து வீசுவதற்கு முன்னதாக முகமது சிராஜை நோக்கி சென்றார். அப்போது சிராஜ் தனது கையை நீட்ட, அவரது கையிலிருந்து திரவம் போன்று எதையோ எடுத்த ஜடேஜா, அதனை தனது கை விரல்களில் பூசிக் கொண்டார். இதை ஆஸ்திரேலியா மீடியாக்கள் கிரீம் பூசி பந்தை சேதப்படுத்தியதாக தெரிவித்தன. மைக்கேல் வாகன், ஸ்டீவ் வாக், டிம் பெயின் போன்ற முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர்.

இதனை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மறுத்துள்ளது. இது பற்றி கூறுகையில் ஜடேஜா வலி நிவாரணி மருந்தையே தனது விரலில் தேய்த்தார் என்றும் பந்தை சேதப்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

வெளியான வீடியோவில் அவர் மருந்தை விரலில் மட்டுமே தேய்ப்பதும், பந்தை சேதப்படுத்தவில்லை என்பதும் தெளிவாகிறது. விளக்கம் கேட்ட நடுவர்கள் பின்னர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இது தற்போது வைரலாகி வருகிறது.