உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்..திடீரென போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ்..உடைகிறதா இந்தியா கூட்டணி..??
தமிழகத்தில் நேற்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணிக்கு இந்தியா கூட்டணி என்று பெயர் வைத்திருந்தனர். இந்நிலையில், தற்போது நடந்துள்ள சம்பவம் இந்த கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டு விட்டதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
அதாவது திராவிடக்கழகம் சார்பில் சமீபத்தில் சனாதானம் ஒழிப்பு மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய அவர், “டெங்கு மலேரியா இவற்றை எல்லாம் நாம் எதிர்க்க கூடாது. ஒழிக்க வேண்டும். அதுபோல தான் சனாதானமும். அதை எதிர்க்க கூடாது ஒழிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.
அவரின் இந்த கருத்திற்கு தேசிய அளவில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. அதுமட்டுமல்ல நாடு முழுவதும் பல இடங்களில் உதயநிதி மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுதவிர கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் உதயநிதியின் இந்த கருத்துக்கு தொடர்ந்து விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள். இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து தெலுங்கானா மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ரேவந்த் ரெட்டி கூறியிருப்பதாவது, “சனாதானம் குறித்து உதயநிதி கூறியுள்ள கருத்து மிகவும் தவறானது. அவர் கூறியுள்ள இந்த கருத்திற்கு நிச்சயம் அவர் தண்டிக்கப்பட வேண்டும்” என கூறியுள்ளார். இதனால் இந்தியா கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி வருகிறார்கள்.