விளையாட்டுத்துறை அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின் !! 35-வது அமைச்சராக பதவியேற்பு!

Photo of author

By Vijay

விளையாட்டுத்துறை அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின் !! 35-வது அமைச்சராக பதவியேற்பு!

Vijay

Updated on:

Udhayanidhi Stalin became Sports Minister !! Inauguration as the 35th minister!

விளையாட்டுத்துறை அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின் !! 35-வது அமைச்சராக பதவியேற்பு!

தமிழ்நாடு அமைச்சரவையில் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாட்டு  அமைச்சராக ஆளுநர் முன்பு பதவி ஏற்றுக்கொண்டார்.

தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி நடைபெற்று வருகிறது.தற்போது தமிழக அமைச்சரவையில் முதல்வர் தவிர்த்து  33 அமைச்சர்கள் உள்ளனர். முதல்வரையும் சேர்த்து 35 அமைச்சர்கள் இடம் பெறலாம். எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையில் 15% அமைச்சராகலாம் என்ற நிலையில் 234 எம்.எல்.ஏக்களில் 35 பேர் அமைச்சர்களாக இடம் பெறலாம்.

இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் மகனும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ வான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று உதயநிதி ஆதரவாளர்களும், குடும்பத்தை சேர்ந்தவர்களும் கோரிக்கை விடுத்த நிலையில் அதற்க்கான பணிகள் தொடங்கியது. மார்கழி மாதத்தில் பதவியேற்பு நடத்த முடியாது என்பதுடன் ஜனவரி மாதத்தில் சட்டசபை நடந்து பிப்ரவரியில் பட்ஜெட் தாக்கல் நடைபெற்று மானிய கோரிக்கை முடியும் வரை அமைச்சரவையில் மாற்றம் செய்ய முடியாது.

2024-ல் லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில் அப்போது உதயநிதியை அமைச்சராக்கினால் வாரிசு பிரச்சனையை கிளப்பலாம். எனவே இந்த மாதமே அமைச்சராக்க முடிவு செய்தார் ஸ்டாலின். அதன்படி இன்று காலை 9-30 மணி அளவில் ஆளுநர் மாளிகையின் தர்பார் ஹாலில் பதவியேற்பு விழா  நடந்தது. அதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாட்டு   அமைச்சராக உதயநிதிக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் ஆளுநர் ஆர்.என். ரவி செய்து வைத்தார். அடுத்து உதயநிதி ஸ்டாலினாகிய நான் என்று தொடங்கி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டார்.