தமிழக டாஸ்மாக் ஊழல் 1000 கோடி நடைபெற்ற இருப்பதாக அமலாக்கத்துறை வெளியிட்ட தகவலின் படி, இந்த ஊழலில் திமுகவின் முதன்மை குடும்பத்திற்கு அதிக அளவு பங்கு இருப்பதாகவும் அதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அமலாக்க துறையின் இந்த அறிவிப்பிற்கு துணை போகும் வகையில் திமுகவின் போக்கும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அமலாக்கத் துறையின் உடைய அறிவிப்பில் ஆயிரம் கோடி ஊழல் என்பது சட்டவிரோதமானது என்றும் இதற்கு இடைக்கால தடை விதிக்கும் படி தமிழக அரசு மற்றும் டாஸ்மார்க் நிறுவனம் நீதிமன்றத்தை நாடி இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாது அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவின் முதன்மை குடும்பத்திற்கு பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து கொடுத்ததன் காரணமாக தான் அவர் சிறைக்கு சென்று திரும்பும் பொழுது கூட அவருடைய பதவி அவருக்கு மீண்டும் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் செந்தில் பாலாஜி அவர்கள் மீண்டு வந்த பிறகுதான் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்று இருக்கிறார் ஆகவே திமுகவில் அவர் சம்பாதித்து கொடுத்த பணத்திற்காக மரியாதை வழங்கப்படுவதாக பார்க்கப்படுகிறது.
இவை மட்டுமே காரணமா என்று கேட்டால் அமலாக்கத்துறை அதனை மறுத்து டாஸ்மார்க் ஊழலில் ஆயிரம் கோடி மட்டுமல்லாது லட்ச கோடிகள் ஊழல் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்கான ஆதாரங்கள் கிடைத்து வருவதாகவும் தெரிவித்ததோடு தற்பொழுது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்த டாஸ்மார்க் ஊழலில் முக்கிய பங்கு வகிக்கிறார் என்பதற்கு தொலைபேசி ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
இவை முழுமையாக நிரூபிக்கப்படும் பட்சத்தில் டெல்லியில் கெஜ்ரிவாலை சிறைக் அனுப்பியது போல தமிழகத்தில் முதல்வர் குடும்பம் முழுவதும் சிறைக்கு செல்ல நேரிடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.