“எப்போதும் என் பார்த்தா அவர்தான்…” குலுகுலு மேடையில் அன்பைக் கொட்டிய உதயநிதி!

0
253

“எப்போதும் என் பார்த்தா அவர்தான்…” குலுகுலு மேடையில் அன்பைக் கொட்டிய உதயநிதி!

நடிகர் சந்தானம் நடித்துள்ள குலுகுலு படத்தின் இசை வெளியீடு நேற்று நடந்தது.

மேயாத மேன் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கும் ‘குலு குலு’ படத்தில் சந்தானம் நடித்து முடித்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அனைத்தும் முடிந்து ஜூலை 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை சந்தானத்தின் நெருங்கிய நண்பரான நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

வரிசையாக முன்னணி நடிகர்களின் படங்களை இந்த ஆண்டு முழுவதும் ரெட் ஜெயண்ட் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக குலு குலு படத்தின் தொலைக்காட்சி உரிமம் சன் தொலைக்காட்சியால் கைப்பற்றப்பட்டது. சமீபத்தில் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது இசை வெளியீடு நடந்துள்ளது.

இந்த நிகழ்வில் நடிகரும் விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் “நான் இங்கு ஒரு நடிகராகவோ அல்லது தயாரிப்பாளராகவோ வரவில்லை. எப்போதும் என் நண்பேன்டா பார்த்தாவுக்காகதான் வந்துள்ளேன். ரத்னகுமார் இந்த படத்தை இயக்குகிறார் என்றதும் பார்க்காமலேயே ஒரு நம்பிக்கை வந்தது. இந்த திரைப்படம் சந்தானத்துக்கு ஒரு மிகப்பெரிய ஹிட்டாக அமையும்” என வாழ்த்தி பேசியுள்ளார்.

Previous article“டிராவிட் என் மேல் நம்பிக்கை வைத்துள்ளார்…” நேற்றைய போட்டியில் கலக்கிய சஹால் கருத்து!
Next articleதூத்துக்குடி மாவட்டத்தில் வளையல் வியாபாரி பரிதாபமாக உயிரிழப்பு! காரணம் இதுதான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here