எனது பள்ளிக்காலத்தில் இருந்து இதைதான் சொல்லி வருகிறார்கள்!மீண்டும் ரஜினியை சீண்டும் மூன்றாம் கலைஞர்!

Photo of author

By Parthipan K

எனது பள்ளிக்காலத்தில் இருந்து இதைதான் சொல்லி வருகிறார்கள்!மீண்டும் ரஜினியை சீண்டும் மூன்றாம் கலைஞர்!

நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே ஒரு நடிகர் அரசியலுக்கு வருவதாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ரஜினியை மறைமுகமாக கேலி செய்துள்ளார்.

செல்லும் இடம் எல்லாம் ரஜினியை சீண்டிப் பார்ப்பதற்காகவே திமுகவில் ஒருவரை வைத்துள்ளார்கள் என்றால் அது மிகையில்லை. அந்த ஒருவர் வேறு யாரும் இல்லை. உடன்பிறப்புகளால் மூன்றாம் கலைஞர் என அன்பாக அழைக்கப்படும் உதயநிதி ஸ்டாலின்தான். சமீப வருடங்களில் அரசியலுக்கு வந்து கட்சிக்குள் அதிகாரமிக்க பதவிகளுள் ஒன்றைப் பெற்றுள்ள அவர் கட்சி கூட்டங்களில் முன்னிலைப் படுத்தப் பட்டு வருகிறார்.

ரஜினி சமீபத்தில் பேசிய துக்ளக் பொன்விழா பேச்சு மற்றும் குடியுரிமைத் திருத்த சட்டம் பற்றிய பேச்சு ஆகியவற்றைக் கலாய்த்து சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து வந்த அவர் இப்போது பொது மேடைகளிலும் ரஜினியை சீண்ட ஆரம்பித்துள்ளார்.

அந்தவகையில் இன்று வடலூரில் நடைபெற்ற திமுக விழாவில் கலந்து கொண்ட அவர் மீண்டும் ரஜினியை வம்புக்கு இழுத்துள்ளார். கூட்டத்தில் பேசிய அவர் ‘நான் பள்ளி படிக்கும் போதில் இருந்தே ஒருவர் அரசியலுக்கு வருவதாக சொல்லிக் கொண்டுள்ளார். அப்படியே அவர் இப்போது வந்தாலும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை’ எனக் கூறியுள்ளார்.

இதைக் கேட்ட ரஜினி ரசிகர்கள் சிலர் ‘என்ன செய்வது உங்களைப் போல அவருக்கு அப்பாவும் தாத்தாவும் இல்லையே!’ என கேலி செய்துள்ளனர்.