“நடிப்பைக் கைவிடவில்லை… மீண்டும் ஒரு படம்…” மீண்டும் இணையும் நெஞ்சுக்கு நீதி கூட்டணி!

Photo of author

By Vinoth

“நடிப்பை விடவில்லை… மீண்டும் ஒரு படம்…” மீண்டும் இணையும் நெஞ்சுக்கு நீதி கூட்டணி!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ இயக்குகிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் வைகை புயல் வடிவேல் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜியன்ட்ஸ் மூவிஸ் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கி சேலம் மற்றும் ஏற்காடு ஆகிய பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

இந்த படத்துக்குப் பிறகு நடிகர் உதயநிதி அரசியலில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. சில மேடைகளில் அந்த தகவலை உதயநிதி ஸ்டாலினும் உறுதிப்படுத்தினார். இந்நிலையில் இப்போது மீண்டும் படங்களில் நடிக்க உள்ளதாகக் கூறியுள்ளார்.

நெஞ்சுக்கு நீதி படத்தின் வெற்றிவிழாவை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய உதயநிதி “மாமன்னன் படத்துக்கு இன்னொரு படத்தில் நடிக்க உள்ளேன். அந்த படத்தையும் அருண்தான் இயக்குவார் என நான் நினைக்கிறேன். அதற்கான பேச்சுவார்த்தைகள் இப்போது நடந்து வருகின்றன” எனக் கூறியுள்ளார். மாமன்னன் தவிர உதயநிதி ஸ்டாலின் மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.