மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம் தான் உத்யோகினி திட்டம். இந்த திட்டத்தின் மூலம் புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ. 1 லட்சம் முதல் 3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் கடன் பெறுபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் மானியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் அனைத்து தரப்பு பெண்களும் பயன்பெறலாம்.
இந்த உத்யோகினி திட்டத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண்களுக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது. எனவே இத்திட்டத்தில் ரூ. 3 லட்சம் கடன் வாங்கினால் ரூ. 1.5 லட்சம் கடன் திரும்ப செலுத்தினால் போதுமானது. மேலும் பொது பிரிவை சேர்ந்த பெண்களுக்கு ரூ. 90,000 வரை மானியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு அனைத்து தரப்பு பெண்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் இத்திட்டத்தின் மூலம் கடன் உதவி வழங்கப்படுவதோடு பெண்களுக்கு தொழில் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக இத்திட்டத்தின் மூலம் கடனுதவி பெற எந்தவித கட்டணமோ, உத்திரவாத ஆவணங்களே தேவையில்லை.
இந்த திட்டதிற்கு விண்ணப்பிக்கும் பெண்களின் குடும்ப வருமானம் 2 இலட்சத்திற்கும் அதிகமாக இருக்க கூடாது மற்றும் இதற்கு விண்ணப்பிக்க எந்தவித வயது வரம்பும் தேவையில்லை. இந்த உத்யோகினி திட்டத்திற்கு விண்ணப்பிக்க சில அடிப்படை ஆவணங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அவை,
- ஆதார் அட்டை
- பிறப்பு சான்றிதழ்
- குடும்ப அட்டைசாதி
- சான்றிதழ்
- பிபிஎல் அட்டை
- வங்கி பாஸ்புக் நகல்
- வருமான சான்றிதழ்
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
இது போன்ற அடிப்படை ஆவணங்களைக் கொண்டு எளிமையாக அருகிலுள்ள வங்கியில் சென்று விண்ணப்பிக்கலாம்.