ரஷ்ய படைகளுக்கு எதிராக போர்க்களத்தில் இறங்கிய உக்ரைன் பொதுமக்கள்!

Photo of author

By Parthipan K

ரஷ்ய படைகளுக்கு எதிராக போர்க்களத்தில் இறங்கிய உக்ரைன் பொதுமக்கள்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள இந்த போரை உடனடியாக கைவிட பல உலக நாடுகள் வலியுறுத்தியும் அதை ரஷிய அதிபர் கேட்கவில்லை. ரஷிய நாட்டு மக்களும் உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும் ரஷியா தொடர்ந்து உக்ரைன் மீது தாகுதல் நடத்தியபடி உள்ளது. ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டு மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

குண்டுவீச்சு மற்றும் ஏவுகணை தாக்குதலால் அவர்கள் உயிருக்கு பயந்து பக்கத்து நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தலைநகர் கீவ்வில் ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் பொதுமக்கள் ஆயுதங்களுடன் போர்க்களத்தில் இறங்கி உள்ளனர். இதற்கிடையே நாட்டை விட்டு வெளியேறிய உக்ரைன் பொதுமக்களில் ஆயிரகணக்கானோர் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் தங்களது சொந்த நாட்டை காப்பாற்றுவதற்காக கையில் ஆயுதங்களை ஏந்தி ரஷிய படைகளுடன் சண்டையிட்டு வருகிறார்கள்.

உக்ரைன் அதிபர் விடுத்த வேண்டுகோளை ஏற்று உக்ரைன் ராணுவத்துக்கு உதவியாக ஏராளமான பொதுமக்கள் ரஷிய படைகளை எதிர்த்து போரிட்டு வருகின்றனர். பொதுமக்களின் பலத்த ஆதரவு உக்ரைன் படைகளுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.