ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியை சேர்ந்தவர் விஜயகோபால். இவர் உத்தராகண்ட் மாநிலத்தில் ராணுவ எல்லை பாதுகாப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார். இவர் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு ஜெர்மின் என்ற பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு அழகான இரு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வந்ததால் கடந்த சில வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். விஜயகோபாலுடன் வாழ பிடிக்கவில்லை என்று சொல்லி ஜெர்மின் விவாகரத்து கேட்டு ஜீவனாம்சம் விஜயகோபால் தரவேண்டும் என்று சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜெர்மின் இரவு நேரத்தில் வீட்டில் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத இரு நபர்கள் இரவு நேரத்தில் முகத்தில் கருப்பு துணியை கட்டிகொண்டு வந்து ஜெர்மினை சரமாரியாக கத்தி மற்றும் அரிவாளால் தாக்கி கொலை செய்தனர். இந்நிலையில் ஜெர்மின் குடும்பத்தை சேர்ந்த நபர்கள் இந்த கொலையில் விஜயகோபாலுக்கு தொடர்புள்ளது என்று சொல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
பின்னர் உத்தராகண்டில் உள்ள விஜயகோபாலை சாயல்குடி வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பல திடுக்கிடும் தகவல்களை அளித்தார். என்னுடைய மனைவி என்னை விட்டு பிரிந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு பல வருடங்களாக தனிமையில் வாழ்ந்து வருகிறார். சொந்தமாக நான் கட்டிய வீட்டையும் ஜெர்மனின் பெயரில் வீடு இருப்பதால் வீட்டை பிடிங்கிக்கொண்டார். அதேபோல விவாகரத்து கேட்டு மாதம் 17000 ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று என் மீது வழக்கும் தொடர்ந்துள்ளார்.
என் மனைவி ஜெர்மினுக்கு ஊரில் பல ஆண்களுடன் கள்ளத் தொடர்பு உள்ளது. இதை எல்லாம் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. என்னுடைய குடும்பதிற்கு மிகப்பெரிய அவமானத்தை ஜெர்மின் ஏற்படுத்தி விட்டார். அதனால் தான் கூலிப்படையை அனுப்பி என்னுடைய மனைவியை கொலை செய்ய சொன்னேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் விஜயகோபால். சொந்த மனைவியை கணவர் கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவத்தால் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி ஆகியுள்ளனர்.