படித்தவன் பாவம் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்! ஆ ராசா!

Photo of author

By Sakthi

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது கட்ட ஆட்சி காலத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது என்று அப்போதைய தலைமை கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய் கூறியிருந்தார்.

இதனால் அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த பாஜக உள்ளிட்டவர்களிடம் காங்கிரஸ் கட்சி வசமாக சிக்கிக்கொண்டது, அதோடு பெரும்பாலான ஊடகங்கள் காங்கிரஸ் கட்சியின் மீதும், அப்போதைய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த திமுகவை சேர்ந்த ஆ. ராசா மீதும், ஏராளமான புகார்களை தெரிவித்தார்கள். இந்த புகார்களில் ராசா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார் அவருடைய வழக்கை தானே நடத்திய பின்னர் டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி சைனி ராசாவை இந்த வழக்கில் இருந்து விடுவித்தார்.

இதற்கிடையில் கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டைம்ஸ் நவ் ஊடகத்திற்கு வினோத் ராய் அளித்த பேட்டியில் 2ஜி தணிக்கை அறிக்கையில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் பெயரை சேர்க்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் நிருபம் தனக்கு நெருக்கடி தந்ததாக குறிப்பிட்டிருந்தார். வினோத்தின் கருத்தை மிக கடுமையாக மறுத்த சஞ்சய் நிருபம் தனக்கு எதிரான குற்றச்சாட்டை தெரிவித்த வினோத் ராய்க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த வழக்கின் காரணமாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் அவர்களிடம் வினோத் ராய் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அந்தப் பேட்டியில் சஞ்சய் நிருபம் தொடர்பாக நான் தெரிவித்த கருத்துக்களை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் அவை உண்மைக்கு புறம்பானவை அதற்காக நான் வருந்துகிறேன் நான் தெரிவித்த கருத்துக்களால் அவருடைய குடும்பத்தினருக்கு ஏற்பட்ட காயத்தை நான் உணர்ந்திருக்கிறேன். அவர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகின்றேன் என்று தெரிவித்திருக்கிறார் தன்னுடைய அபிடவிட்டை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கின்றார் வினோத் ராய்.

இதுதொடர்பாக தற்சமயம் கருத்து வெளியிட்டு இருக்கின்ற முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளருமான ராசா வினோத் ராய் தொடர்பாக விமர்சனம் செய்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை அவர் மீது எவ்வளவு கோபம் இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும். அப்போதுதான் அண்ணல் அம்பேத்கரின் மேற்கோள் ஒன்று எனக்கு கிடைத்தது ஒரு மனிதனுடைய அறிவு அந்த சமூகத்திற்கு எதிராக போகும் என்றால் அவன் மிருகத்தை விட கொடியவன் என்று புத்தகத்தில் எழுதியுள்ளேன் எனது 2ஜி தொடர்பான தன்னுடைய புத்தக வெளியீட்டில் தான் பேசிய வீடியோவை நினைவு கூர்ந்து வெளியிட்டிருக்கிறார்.