அதிமுக அரசின் குளறுபடிகள்: தலைவிரித்தாடும் வேலை இல்லா திண்டாட்டமும் வருமான இழப்பும் என்று ஸ்டாலின் அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து, நேற்று டூவிட் ஒன்றை போட்டுள்ளார்.அதில் அவர் கூறியவாறு:
டிசம்பர் 2019 ஆண்டை ஒப்பிடுகையில் வேலையின்மை பத்து மடங்காக உயர்ந்துள்ளது.வேலையில்லா திண்டாட்டம் 49.8 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
ஒழுங்குமுறை இல்லாமல் ஊரடங்கி நீட்டித்து டாஸ்மாக்கை திறந்து, கொரோனா பரவதற்கான வாய்பினை அதிமுக அரசு ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் தமிழ்நாட்டில் 53 சதவீத வீடுகளில் தலா ஒருவர் வேலை இழக்கின்றனர்.
நகர்ப்புறங்களில் சுமார் 50% குடும்பங்களிலும் கிராமப்புறங்களில் சுமார் 56 சதவீத குடும்பங்களில் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும்
திமுக சொன்னபோது கேட்காத முதலமைச்சர்,அரசே நடத்தியுள்ள ஆய்வின் தகவலை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
“இ – பாஸ் நடை முறையை முற்றிலுமாக ரத்து செய்தும்,ஒவ்வொரு குடும்பத்துக்கு தலா 5,000 ரூபாய் நிதி உதவி தமிழக அரசால் வழங்கப் பட வேண்டும்”.மேலும் முதலீட்டாளர் மாநாடு வெளிநாடு சுற்றுலா மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் பெறப்பட்ட முதலீடுகள், உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகளை, குறித்து “வெள்ளை அறிக்கையை” வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் அதிமுக அரசை கண்டித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/mkstalin/status/1297436631364825089?s=08