இந்தியாவின் இந்தப் பழமையான ரயில்வே நிலையத்திற்கு யுனெஸ்கோ விருது!!

Photo of author

By Amutha

இந்தியாவின் இந்தப் பழமையான ரயில்வே நிலையத்திற்கு யுனெஸ்கோ விருது!!

Amutha

unesco-award-for-indias-oldest-railway-station

இந்தியாவின் இந்தப் பழமையான ரயில்வே நிலையத்திற்கு யுனெஸ்கோ விருது!! 

இந்தியாவில் உள்ள 169 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையத்திற்கு யுனெஸ்கோ அமைப்பு விருது வழங்கியுள்ளது.

இந்தியாவில் மத்திய மும்பை நகரில் பைகுல்லா என்ற பகுதியில் சுமார் 169 ஆண்டுகள் பழமையான ரெயில் நிலையம் ஒன்று உள்ளது. தற்போது அதனை புதுப்பொலிவு பெற செய்யும் நோக்கில்  ரெயில் நிலையத்தை மீட்டெடுக்கும் பணி கொரோனா பெருந்தொற்று நாட்டில் பரவுவதற்கு முன்பு 2018-ஆம்  இருந்தே ஆண்டில் தொடங்கியது.

ஏறக்குறைய இந்த பணியில் 650 தொழிலாளர்கள் மற்றும்பல தன்னார்வலர்களும்  ஈடுபட்டனர். இதன் காரணமாக  5 ஆண்டுகளாக கடின உழைப்பால் இந்த ரெயில் நிலையம் மீட்டெடுக்கப்பட்டு, புதுப்பொலிவை தற்போது பெற்றுள்ளது.

இதற்கான முயற்சியை தொடங்கி திட்ட பணியை முன்னேடுத்த 3 பெண்களுக்கு மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், யுனெஸ்கோவின் ஆசிய பசிபிக் கலாசார பாரம்பரிய விருது வழங்கி கௌரவித்தார்.

இந்த பணியில் ஈடுபட்ட பெண்களில் ஒருவரான பாஜக வைச் சேர்ந்த எம்பி ஷாய்னா ஏன்.சி கூறும்போது 169 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையத்தின் சிற்பம்,தோற்றங்கள் ஆகியற்றை மீட்டு எடுப்பதில் பெரிய சிரமம் ஏற்பட்டது.

ஆனால் விடாது செய்த முயற்சியில் வரலாற்று நினைவு சின்ன மீட்பு பணியில் வெற்றி பெற்று இருக்கிறோம். கடின உழைப்பை கடந்த 5 ஆண்டுகளில் இதில் மேற்கொண்டதன் விளைவே இந்த வெற்றி ஆகும். இந்த ரயில் நிலையத்தில் உள்ள மணி,இருக்கைகள் என ஒவ்வொரு செயலிலும்  தோற்றம் மாறாமல் அவைகள் மீட்கப்பட்டு உள்ளன.

இதன் காரணமாக யுனெஸ்கோவின் ஆசிய பசிபிக் கலாசார பாரம்பரிய விருது கிடைத்து உள்ளது. இது உண்மையில் நமது நாட்டுக்கான ஒரு மிகப்பெரும் சாதனை. எங்களது மும்பை மக்களின் அன்புக்காக இந்த பணியை மேற்கொண்டு சிறப்பாக செய்துள்ளோம், என அவர் தெரிவித்தார்.